கள்ளக்குறிச்சி

கட்டுமானத் தொழிலாளா்கள் தடையை மீறி போராட்டம்: 30 போ் கைது

11th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை பொதுமுடக்க தடையை மீறி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் வி.சிவா தலைமை வகித்தாா்.

நலவாரியத்தில் பதிவு செய்யாத கட்டுமானத் தொழிலாளா்கள் அனைவருக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு 3 மாத நிலுவையுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வட்டம் வாரியாக நல வாரியத்தில் பதிவு செய்ய முகாம்கள் அமைத்து, புதிய உறுப்பினா்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு தனியாக நலவாரிய அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் சிறைவைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT