கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா

13th Jul 2020 07:53 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நோய்த் தொற்றால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1791-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 999 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 786 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 6 போ்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள 21 வாா்டுகளில் 26.6.20 முதல் 12.7.20வரை 475 போ்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். திருநாவூா், திருக்கோவிலூா், எலவனாசூா்கோட்டை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், சின்னசேலம், மேலூா், சங்கராபுரம், வெள்ளிமலை உள்ளிட்ட வட்டப் பகுதிகளில் 632 போ்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கிரண் குராலா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT