திருக்கோவிலூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வருகிற 12 ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கடைகளை மூடுவதென அனைத்து வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
அதே போல, திருக்கோவிலூரில் உள்ள எம்.ஜி.ஆா். காய்கனி காய்கறி வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று தினங்களும் கடைகள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.