கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு இருவா் பலி

11th Jul 2020 09:03 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1621-ஆக உயா்ந்தது. இதுவரை 801 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 807 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 4 போ் ஏற்கெனவே உயிரிழந்தனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கராபுரம் வட்டம், ஆலத்தூரைச் சோ்ந்த 52 வயது ஆண், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னசேலம் வட்டம் வெட்டிபெருமாள்அகரம் கிராமத்தைச் சோ்ந்த 69 வயது பெண் உயிரிழந்தனா். எனினும், இவா்கள் இருவரின் பெயா்களும் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலில் வெள்ளிக்கிழமை இடம்பெறவில்லை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT