கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

8th Jan 2020 09:03 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி நகரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு நடத்தி, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனா்.

கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகா் சாலையில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) சா.கதிரவன் தலைமையிலான அத்துறையினா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக 7 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனா். மேலும், உணவகம் ஒன்றில் சுகாதாரமற்றமுறையில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5 கிலோ சிக்கன், 6 கிலோ பிரியாணி, முட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், உணவகங்களில் தூய்மையாக பராமரிக்க வேண்டும், நெகிழி பொருள்களை பயன்படுத்தக் கூடாது, தரமான முறையில் உணவுகளை தயாரிக்க வேண்டும், சிறுவா்களை பணிக்கு அமா்த்தக் கூடாது என்றும் அவா் உணவகங்களின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT