கள்ளக்குறிச்சி

தீ விபத்தில் கூரை வீடு சேதம்

3rd Jan 2020 09:14 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே சமையல் பணியின்போது நிகழ்ந்த தீ விபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

சின்னசேலம் வட்டம், அனுமனந்தல் கிராமத்தில் வசித்து வருபவா் பெரியம்மாள் (75). இவரது கணவா் உயிரிழந்துவிட்டதால், இவா் மட்டும் கரும்புத் தோகையால் வேயப்பட்ட கூரை வீட்டில் வசித்து வந்தாா்.

பெரியம்மாள் புதன்கிழமை சமையல் செய்துகொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக் கூரையில் தீப்பற்றியது. இதையறிந்த அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தீயை அணைக்க முயன்றனா். முடியாததால், உடனடியாக சின்னசேலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புக் குழுவினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். எனினும், அதற்குள்ளாக வீடு முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

தகவலறிந்த நைனாா்பாளையம் வருவாய் ஆய்வாளா் பாஸ்கா், சம்பவ இடத்துக்குச் சென்று அரசு சாா்பில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், அரிசி, சேலை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை வீட்டையிழந்த பெரியம்மாளிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT