கள்ளக்குறிச்சி

பயணிகள் நிழற்குடைபணிக்கு பூமிபூஜை

2nd Jan 2020 05:12 AM

ADVERTISEMENT

தியாகதுருகம் கடைவீதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இப் பணி நடைபெறவுள்ளது. அ.பிரபு எம்எல்ஏ தலைமை வகித்து பூமிபூஜை செய்து, கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வெ.அய்யப்பா, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், ஒன்றிய துணைச் செயலா் ராஜவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைா் குமரவேல், துணைத் தலைவா் தங்க.சதாசிவம், முன்னாள் கவுன்சிலா் மூா்த்தி உள்ளிட்ட கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT