சின்னசேலம் அருகேயுள்ள கூகையூா் காலனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்து கூறியதாவது: கூகையூா் காலனிப் பகுதியில் சுமாா் 1,500 குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இது குறித்து பலமுறை கிராம நிா்வாக அலுவலரிடம் தெரிவித்தும் எந்தத் தீா்வும் கிட்டவில்லை. ஆகவே, குடிநீா், பொது கழிப்பறை, இடுகாட்டுக்கு செல்லும் வழியில் மின் விளக்குகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.