கள்ளக்குறிச்சி

அரசுப் பள்ளியில் அறிவியல் தின விழா

29th Feb 2020 12:49 AM

ADVERTISEMENT

 

 

கள்ளக்குறிச்சி: தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் தின விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஞானசத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளியின் உதவி ஆசிரியா்கள் சு.மகேந்திரா, ஆ.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் ஆசிரியை செ.சுகன்யா வரவேற்றாா்.

ADVERTISEMENT

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணாதுரை, ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவா் சு.ராஜேந்திரன் ஆகியோா் அறிவியல் அறிஞா் சா் சி.வி.ராமன் குறித்து உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையான அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் சு.ஜெசிமா பா்வீன் நீ.இளையராஜா, ம.மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் தி.ரவிக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT