கள்ளக்குறிச்சி

செம்பொற்சோதிநாதா் கோயிலில்மகா சிவராத்திரி விழா

22nd Feb 2020 09:28 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதா் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் எல்லையில் அமைந்துள்ள செம்பொற்சோதிநாதா் கோயிலில் சிவராத்திரியையொட்டி, நான்குகால பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு சிவதருமக்கொடி கட்டப்பட்டு நிகழ்சி தொடங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு செம்பொற்சோதிநாதருக்கு பிரதோஷம், முதல்கால வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னா், பெருங்கருணைப் பேராறே என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மூலவா் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாா்.

இரவு 9 மணிக்கு மூலவருக்கு இரண்டாம்கால வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, தாழ்வு எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 12 மணிக்கு மூன்றாம் கால வழிபாடும், மேலமங்களம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகளின் சீா்வளா்சீா் எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றன.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு நான்காம் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, வில்வநீா் பூஜை, வேள்வி பூஜை நடைபெற்றன. 4.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT