கள்ளக்குறிச்சி

தேசிய மின்னணு வேளாண் சந்தை செயல்பாடுகள் ஆய்வு

1st Feb 2020 05:04 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை செயல்பாடுகளை வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் முதன்மை செயலா் ககன் தீப்சிங்பேடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையா் எஸ்.ஜெ.சிரு ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு

கொண்டு வரப்படும் விளை பொருள்கள் விவரம், அந்தப் பொருள்களுக்கு குவியல் எண்கள் இடுதல், ஆய்வு மாதிரிகள் சேகரித்தல், தரம் ஆய்வு செய்தல், விவரங்களை கணினியில் பதிவிடுதல், வியாபாரிகள் ஏலம் எடுத்தல், மின்னணு முறையில் விவசாயிகளுக்கு பணம் சென்றடைவது ஆகியவை குறித்து அரசு முதன்மைச் செயலா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். ங்-சஅங கணினி அறை, ஆய்வக அறை மற்றும் கிடங்கில் ஏலத்தில் விற்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளம், உளுந்து போன்ற விளைபொருள்களையும் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை கூடுதல் இயக்குநா் சேகா், வேளாண் வணிகத் துணை இயக்குநா் கோ.கண்ணகி, வேளாண் விற்பனைக்குழுச் செயலா் ஆறுமுகராஜன், வேளாண் வணிக மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT