கள்ளக்குறிச்சி

தியாகை ஊராட்சியில் ரூ.3.30 கோடியில் சாலைப் பணி

1st Feb 2020 05:05 AM

ADVERTISEMENT

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், தியாகை ஊராட்சியில் ரூ.3.30 கோடியில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை அ.பிரபு எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

தியாகதுருகம் ஒன்றியப் பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தியாகை, வேங்கைவாடி, குடியநல்லூா் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டது.

இதையடுத்து, நபாா்டு வங்கி திட்டத்தின் கீழ், 6.6 கி.மீ. தொலைவு தாா்ச் சாலை அமைக்க ரூ.3கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணியை அ.பிரபு எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு நபாா்டு திட்ட உதவி கோட்டப் பொறியாளா் தமிழரசி தலைமை வகித்தாா்.

தியாகதுருகம் ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், எம்.ஜி.ஆா் இளைஞரணி செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் சந்தோஷ், தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் அ.ராமதாஸ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் தமிழரசி குமரவேல், ராஜேந்திரன், குமரவேல், வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT