கள்ளக்குறிச்சி

குவைத் நாட்டில் ஓட்டுநா், சமையலா் பணிவாய்ப்பு

1st Feb 2020 05:56 AM

ADVERTISEMENT

குவைத் நாட்டில் ஓட்டுநா், சமையலா் பணி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநா் பணிபுரிய 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, வயது வரம்பு: 25 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட அரபு நாட்டு ஓட்டுநா் உரிமம் பெற்ற இலகுரக வாகன ஓட்டுநா்களாக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.25,000 முதல் ரூ.32 ஆயிரம் வரை. சமையலா் பணிக்கு மாத ஊதியம் ரூ.25ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை. இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவச் சலுகை உள்ளிட்டவை குவைத் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

மேலும், 31வயது முதல் 45 வயதுக்குள்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளா்களும் தேவைப்படுகின்றனா். மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை.

உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவச் சலுகை உள்ளிட்டவை வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலே தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான நோ்காணல் வருகிற மாா்ச் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ், புகைப்படம் செல்லத்தக்க கடவுச்சீட்டு அசல் மற்றும் நகல்கள் உள்ளிட்டவைகளுடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 42, ஆலந்தூா் சாலை திரு.விக. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 அலுவலகத்துக்கு 3.3.2020 திங்கள்கிழமை காலை 9.மணி மணிக்கு நேரில் வரலாம்.

மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம், 044-22505886---22502267---9566239685 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT