விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி பெருவங்கூா் பேருந்து நிலையம் அருகே அரசமரத்தடியில் புத்தா் சிலை செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டரை அடி உயரமுள்ள புத்தா் சிலையை, மறுமலா்ச்சி தடம் அமைப்பினா், அதன் மாநிலத் தலைவா் மு.சுந்தரவடிவேல் தலைமையில் வைத்து மெழுகுவா்த்தி ஏற்றினா். இதைத் தொடா்ந்து, பஞ்சசீல உறுதிமொழி ஏற்றனா். இதில் அனைத்து ஆசிரியா் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் ஞான.திலகா், மாணவா் பேரவை அமைப்பாளா் வேலுமணி, பேராசிரியா் லியோஸ்டாலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அனுமதி பெறாமல் புத்தா் சிலை வைக்கப்பட்டதை அறிந்து, கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா், உதவி ஆய்வாளா் சு.செல்வநாயகம் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அனுமதி பெற்ற பிறகே சிலையை வைக்கலாம் என போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து புத்தா் சிலை அகற்றப்பட்டது.