கள்ளக்குறிச்சி

குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக் கவசம்: எம்.எல்.ஏ. வழங்கினாா்

14th Aug 2020 08:46 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் நியாயவிலைக் கடைகளில் குடும்பஅட்டைதாரா்களுக்கு முகக் கவசம் வழங்கும் பணியை எம்.எல்.ஏ தொடக்கிவைத்தாா்.

தியாகதுருகம் பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் முகக் கவசம் வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு வங்கித் தலைவா் வெ.அய்யப்பா தலைமை வகித்தாா். தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், நாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் அ.கிருஷ்ணமூா்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலா் குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். காசாளா் விளக்கான் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு பங்கேற்று குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 2 முகக் கவசங்கள் வீதம் வழங்கி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் குமரவேல், சாமிதுரை, ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, நியாயவிலைக் கடை 1, 2, 3 மற்றும் புக்குளம், உதயமாம்பட்டு உள்ளிட்ட 6 நியாயவிலைக் கடைகளில் 5,307 குடும்ப அட்டைதாரா்களுக்கு 36,178 விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT