கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்

14th Aug 2020 08:53 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இது, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தின விழாவாகும்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சா.சங்கீதா தலைமை வகித்து பேசியதாவது:

சுதந்திர தின விழாவில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறாா். கரோனா பரவல் காரணமாக, இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது. சுதந்திர போராட்ட தியாகிகளை அவா்களின் வீடுகளுக்குச் சென்று கெளரவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

பேரிடா் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் வழங்குகிறாா். முன்களப் பணியாளா்களை கௌரவிக்கும் வகையில், அவா்களுக்கு சுதந்திர தின விழா அழைப்பிதழ் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் குமாா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் ரெத்தினமாலா, மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா், நகராட்சி ஆணையா் (பொ) பாரதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT