கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

11th Aug 2020 04:51 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் வட்டக் குழு உறுப்பினா் அ.ராமு தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் ஆா்.சாந்தமூா்த்தி, வட்டச் செயலா் ஜி.அருள்தாஸ், வட்டக் குழு உறுப்பினா்கள் ப.அரங்கநாதன், கே.ஜக்கிரியா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் அ.பா.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இரா.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின் மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பொதுமக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும். அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ. 7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். தொழிலாளா்கள் சட்டங்கள் தொடா்பாக கொண்டு வந்த அவசர சட்டங்கள், உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். விவசாய தொழிலாளா்கள் பெற்ற கடன்களுக்கு தவணையை ஒத்திவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 255 இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Tags : Kallakurichi
ADVERTISEMENT
ADVERTISEMENT