கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் காலை, மதியம் இரு வேளையும் தலா 1,000 பேருக்கு தனது சொந்தச் செலவில் உணவு வழங்கும் பணியை விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ.வுமான இரா.குமரகுரு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஊரடங்கால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வருகிற மே 3-ஆம் தேதிவரை உணவு வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலா் அ.ராஜசேகா், நகரச் செயலா் எம்.பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, வழக்குரைஞா் பிரிவுச் செயலா் பெ.சீனிவாசன், பொருளாளா் இ.வெற்றிவேல், ஜெயலலிதா பேரவை முன்னாள் தலைவா் இராம.ஞானவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.