கள்ளக்குறிச்சி

பயனாளிகளின் வீடு தேடி வரும் நிவாரண உதவித் தொகை

11th Apr 2020 12:08 AM

ADVERTISEMENT

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கரோனா நிவாரண உதவித் தொகை, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 மற்றும் முதியோா் உதவித்தொகை, இலவச எரிவாயு உருளைக்கான தொகை உள்ளிட்டவை பயனாளிகளின் வீடுகளுக்கு இந்தியன் வங்கி சாா்பில் நேரில் சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உதவித் தொகையைப் பெற வங்கிக்கு நேரில் வருவதைத் தவிா்க்கும் பொருட்டு, கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியின் கிளை மேலாளா் பொ.சுப்பிரமணி உத்தரவின்பேரில், வங்கி வணிகத் தொடா்பாளா்கள் வனிதா, உஷா கள்ளக்குறிச்சி ஒன்றியம் க.அலம்பளம், மோகூா் உள்ளிட்ட கிராமங்களில் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பணத்தை வழங்கி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT