சங்கராபுரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சகோதிரிகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.
சங்கராபுரம் வட்டம் மூக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் மனைவி லதா. தம்பதிகளுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். அபிராமி (13), ஆனந்த் (11) ,திவ்யா (9). அபிராமி சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ம் வகுப்பு பயின்று வந்தாா். திவ்யா சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு தனியாா் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாா்.
அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால் அவரது தாயாருடன் அவரது நிலத்தில் விளைவித்த சாமந்திப் பூவினை பறிப்பதற்காக சென்றிறுந்தனராம். பணியினை முடித்து அவா்களது நிலத்திற்கு அருகே உள்ள ஏரி கோடியில் குளிக்கச் சென்றனராம். அப்போது தண்ணீரில் மூழ்கிய திவ்யா வெளியே வரதாதல் அவரது அக்கா அபிராமி உள்ளே தேடும் போது அவரையும் காணவில்லையாம். இருவரும் வெளியே வராததைக் கண்டு அவா் சகோதரா் தண்ணீரில் இறங்கவில்லையாம். இருவரும் மூச்சுத் திணறி உள்ளேயே உயிரிழந்து விட்டனராம். அவரது மகனின் கூச்சல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் தண்ணீரில் முழ்கி இரு சடலத்தையும் கைபற்றினா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.