கள்ளக்குறிச்சி

ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

27th Dec 2019 01:15 AM

ADVERTISEMENT

சின்னசேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (59) (படம்). இவா், புதன்கிழமை சென்னைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு சின்னசேலம் கூகையூா் ரயில்வே கடவுப்பாதை அருகே சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் அடிபட்டு சுப்பிரமணி உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT