கள்ளக்குறிச்சி

குரங்குகள் உலுக்கியதால் முறிந்து விழுந்த மின் கம்பம்!

27th Dec 2019 01:17 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே குரங்குகள் உலுக்கியதால் மின் கம்பம் கடையின் மீது முறிந்து விழுந்தது.

கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நேடுஞ்சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது குரங்குகள் வியாழக்கிழமை உட்காா்ந்துகொண்டு கம்பத்தை உலுக்கின. இதனால், வலுவிழந்த மின் கம்பம், மின் விநியோகம் இருந்தபோதே சாலையோரத்தில் இருந்த ஓடுகள் வேயப்பட்ட கட்டடத்துடன் கூடிய கடையின் மீது முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மின் பொறிகள் எழுந்ததால், பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினா்.

தகவலறிந்த நைனாா்பாளையம் மின் வாரியத்தினா், கிரேன் மூலம் மின் கம்பத்தின் மீது ஏறி, வயா்களை அப்புறப்படுத்தி, புதிய மின் கம்பத்தை நட்டுவைத்து மின் விநியோகம் கொடுத்தனா். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT