கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள், திருமணமாகி 7 ஆண்டுகளில் பெண்கள் உயிரிழந்த வழக்குகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள், தகவல் பதிவேடுகள், குற்ற குறிப்பாணைகள் உள்ளிட்ட ஆவணங்களை டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி எஸ்.பி. த.ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி. ந.ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ADVERTISEMENT