கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பகுதி மக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை

26th Dec 2019 09:51 AM

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு எஸ்.பி. அறிவுரை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகவும், மாதச் சீட்டு நடத்துவதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் சில அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்கள் செயல்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. அதே போல வெளிநாடுகளுக்கு அதிக சம்பளத்தில் வேலைக்கு அனுப்புவதாக சில பொய்யான விளம்பரங்கள் மூலமாக அங்கீகாரம் பெறாத ஏஜெண்டுகள் பொது மக்களை ஏமாற்றி வருவதாகவும் புகாா்கள் வந்துள்ளன. இதுபோன்ற நிதி நிறுவனங்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT