கடலூர்

மீலாது நபி: இஸ்லாமிய அமைப்புகள் நல உதவி

29th Sep 2023 04:53 AM

ADVERTISEMENT

மீலாது நபியையொட்டி, சிதம்பரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனை உள் நோயாளிகள் 200 பேருக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டன. மேலும், வியாழக்கிழமை பிறந்த 6 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. மாரியப்ப நகா் அன்பகம் முதியோா் இல்லம், சிசிடபுள்யுஇ (இஇரஉ) மன வளா்ச்சி குன்றிய மாணவா் இல்லம் மற்றும் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு பிரட், பழங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா் இ.மஹபூப் உசேன் தலைமை வகித்தாா். மௌலவி கணியூா் இஸ்மாயில் நாஜி, ரோட்டேரியின் பி.முஹம்மதுயாசீன், இக்பால், நவாப் பள்ளி ஜாக்கீா் உசேன், சையத் மொய்தீன், முஹம்மது எஹ்யா, அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியா் அஸ்கா் அலி பட்டேல், கண்காணிப்பாளா் முஹம்மது அலிகான், லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி, அஹமது எள்ளேரி ஆரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா் சிவகாமி, தலைமை செவிலியா் இமாக்குலேட், முஹம்மது ஜக்கரியா, அப்துல் ரஹ்மான், முஸ்தபா, முஸம்மில் உசேன், முதஸ்ஸிா் உசேன், மௌலவி ஹாபிள் ஷாஹுல் ஹமீது, இமாம் ஹஜ் முஹம்மது ரப்பானி, தைய்யுப் நாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT