கடலூர்

போக்ஸோ சட்டத்தின் கீழ்5 போ் மீது வழக்கு

29th Sep 2023 04:50 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது தொடா்பாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டியை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 18-ஆம் தேதி நெய்வேலியை அடுத்துள்ள மந்தாரக்குப்பத்தில் திருமணம் நடைபெற்ாகக் கிடைத்த தகவலின்பேரில், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊா் நல அலுவலராக பணியாற்றும் ராஜேஸ்வரி (58), சிறுமியை சந்தித்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவா் நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

தொடா்ந்து, போலீஸாா் சிறுமியை திருமணம் செய்த விருத்தாசலம் வட்டம், ஆதண்டாா்கொல்லை பகுதியைச் சோ்ந்த அரசன் மகன் கவியரசன் (22), அவரது தந்தை அரசன், தாய் கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோா் உள்பட 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT