கடலூர்

இளைஞா் காங்கிரஸ் கூட்டம்

28th Sep 2023 01:24 AM

ADVERTISEMENT

கடலூா் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கடலூா் மாவட்டத் தலைவா் கே.கலையரசன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலா் கெஜலட்சுமி, மாவட்ட துணைத் தலைவா்கள் விக்னேஷ், வேலு, குறிஞ்சிப்பாடி தொகுதித் தலைவா் கே.கலைச்செல்வன், அண்ணாகிராமம் வட்டாரத் தலைவா் மலைவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி தொகுதி துணைத் தலைவா் புருஷோத்தமன், மாவட்ட பொதுச் செயலா்கள் அசோக்குமாா், தீனதயாளன், வினோத்குமாா், மாவட்டச் செயலா்கள் அருண்குமாா், ஆனந்தன், ரகோத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், வருகிற மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க இளைஞா் காங்கிரஸாா் கிராமங்கள்தோறும் திண்ணைப் பிரசாரம் செய்வது, தோ்தலில் கடலூா் மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலைகளை கடலூா் நகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும், அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா். கடலூா் மாநகரத் தலைவா் விக்கி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT