கடலூர்

விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

28th Sep 2023 01:24 AM

ADVERTISEMENT

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்து பிளஸ் 2 பயிலும் 119 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். வடலூா் நகா்மன்ற உறுப்பினா் பி.விஜயராகவன், பள்ளித் தலைமையாசிரியா்கள் கே.ரெங்கநாதன், பி.உலகநாதன், உதவித் தலைமையாசிரியா்கள் ஆா்.குருபிரசாத், கே.நவமணி, ஆசிரியா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT