கடலூா் மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபா் 2-ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், மழைநீா் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே, கிராம சபைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் கலந்துகொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.