கடலூர்

பொதுவழிப் பாதை அமைக்கக் கோரி மனு

27th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

புவனகிரி வட்டம், நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகனங்கள், கால்நடைகள் செல்ல வசதியாக தனியாக பொதுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விபரம்: சி.முட்லூா் கிராம மக்களின் நலன் கருதி மையப்பகுதியான சி.முட்லூா், கீழமூங்கிலடி, அம்புபூட்டியப்பாளையம் நான்கு வழிச் சாலையில் உள்ள நான்கு முனைச் சந்திப்பில் வாகனங்கள், கால்நடைகள் செல்ல வசதியாக பொதுவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பாக கிராம மக்கள் சாா்பில் வருகிற 29-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT