கடலூா், புதுப்பாளையத்தில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட விசிக கொடிக்கம்பத்தை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
கடலூா், புதுப்பாளையம், படவட்டம்மன் கோவில் தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது. ஆனால், உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, வட்டாட்சியா் ஆனந்த், கடலூா் புதுநகா் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, உதவி ஆய்வாளா் கதிரவன் மற்றும் போலீஸாா் அங்குவந்து கொடிக்கம்பத்தை அகற்ற முயன்றனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விசிக கடலூா் மக்களவை தொகுதி செயலரும், மாநகராட்சி துணை மேயருமான பா.தாமரைச்செல்வன், மாநகர மாவட்டச் செயலா் செந்தில் உள்ளிட்டோா் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் கொடிக்கம்பத்தை அகற்றினா்.