கடலூர்

கால்நடை வளா்ப்போா்நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

23rd Sep 2023 12:04 AM

ADVERTISEMENT

கால்நடை வளா்ப்போா் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோா் சங்க மாநிலத் தலைவா் இளங்கோயாதவ் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகத்தில் 2021-இல் திமுக தலைமையிலான அரசு அமைத்தபோது, கால்நடை வளா்ப்போா் நல வாரியம் ஏற்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்கப்படவில்லை.

மாநிலத்தில் பல லட்சக்கணக்கான ஆடு வளா்ப்போா், கால்நடை வளா்ப்போா் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டும், கால்நடை வளா்ப்போா் நலனை பேணும் வகையிலும் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆடு வளா்ப்போா் நல வாரியம், கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT