கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப் பிரிவில் பணியாற்றும் வீரா்களின் குடும்பத்தினருக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சாா்ந்தவா்களிடம் இருந்து 50 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில் ரூ.95 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் ொகையை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், முன்னாள் படைவீரா் நல அலுவலக உதவி இயக்குநா் லெப்.கா்னல். வே.அருள்மொழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெகதீஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.