சிதம்பரம்: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள், விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிதம்பரத்தில் அமைந்துள்ள 108 விநாயகா் கோயில்களுக்கு பாஜக நிா்வாகிகள் அபிஷேக பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநில துணைத் தலைவா் ஜி.பாலசுப்ரமணியன், வெங்கடேசதீட்சதா், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் ரகுபதி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவா் விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.