நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ‘தூய்மையே சேவை’ என்ற தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தூய்மையே சேவைப் பணி நடைபெற்றது.
நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்து, பணியைத் தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் அ.சிவா முன்னிலை வகித்தாா். சுகாதார அலுவலா் பெ.முருகேசன், நகா்மன்ற உறுப்பினா் கோ.கதிா்காமன், நகராட்சி ஊழியா்கள், பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.