கடலூர்

சத்துணவு ஊழியா்கள் மறியல்: 48 போ் கைது

27th Oct 2023 12:32 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலி ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 48 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வருவாய் கிராம ஊழியா்களுக்கு வழங்குவதுபோல அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவுப் பணியாளா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாநிலச் செயலா் குணா, இணை ஒருங்கிணைப்பாளா்கள் நடராஜன், கிருஷ்ணமூா்த்தி, தங்கவேல், பரமசிவம், மணிதேவன், சீனிவாசன், மாவட்டச் செயலா் ரங்கசாமி உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT