கடலூர்

பாலியல் வன்கொடுமை: சிறுவன் மீது வழக்கு

4th Oct 2023 12:14 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புவனகிரி பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT