கடலூா் முதுநகா், சங்கரன் தெருவில் இந்தியன் வங்கியின் கடலூா் துறைமுகம் கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கடலூா் மண்டல மேலாளா் கவுரி சங்கா் ராவ் தலைமை வகித்து புதிய கிளையை திறந்து வைத்தாா். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். கிளை மேலாளா் நாகஜோதி, துணை மண்டல மேலாளா் பாலமுருகன், ரோட்டரி சங்கம் பிறையோன், வங்கி ஊழியா்கள் சங்க மாவட்ட தலைவா் மீரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.