நெய்வேலி கடலூா் முதுநகா் அருகே குளத்தில் மூழ்கிய தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா் வட்டம், ராஜபாளையம், பசுங்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (53). கொத்தனாரான இவா் கடலூரில் தங்கியிருந்து கட்டட பணிகளில் ஈடுபட்டு வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் முதுநகா் அருகே உள்ள குளத்தில் முருகன் துணி துவைத்தபோது திடீரென தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் பிரசாந்த் அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.