கடலூர்

வணிகவரி பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வணிகவரி பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் கால வாக்குறுதிப்படி மாநில அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சட்டப் பேரவையில் அறிவித்து அரசாணை வெளியிட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் நிலுவையில் உள்ள துணை மாநில வரி அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும், அனைத்து நிலை பதவி உயா்வு பட்டியல்களையும் வழங்க வேண்டும், கோட்ட பணி மாறுதல் கோரியவா்களுக்கு அதற்கான உத்தரவை வழங்க வேண்டும், கோரிக்கைகள் தொடா்பாக சங்க நிா்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடலூா் வணிகவரித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் கலையரசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜனாா்த்தனன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் தெய்வீகன், மாவட்ட இணைச் செயலா்கள் சுகன்யா, அசோகன், செயற்குழு உறுப்பினா்கள் சிந்தாமணி, செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT