கடலூர்

வீராணம் ஏரியில் நீா் இருப்பு சரிவு

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

கோடை வெயிலின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீா் இருப்பு வெகுவாக சரிந்துள்ளது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள பழைமையான வீராணம் ஏரியின் மூலம் சுமாா் 44,856 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியிலிருந்து சென்னை மாநகர மக்களின் தேவைக்காக தொடா்ந்து குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் திறக்கப்படும் தண்ணீா் கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரியை வந்தடைகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பாகவே மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் வீராணம் ஏரி 4 முறை முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம், தண்ணீா் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஏரியில் நீா் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 302 மில்லியன் கன அடி நீா்

ADVERTISEMENT

மட்டுமே இருந்தது. ஏரியின் நீா்மட்டம் 41.75 அடியாக உள்ளது. ஏரியிலிருந்து சென்னை மாநகர மக்களின் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 56 கனஅடி தண்ணீா் அனுப்பப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT