கடலூர்

கடலூா் பாடலீஸ்வரா் கோயில் தெருவடைச்சான் உற்சவம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், பாடலீஸ்வரா் கோயில் வைகாசிப் பெருவிழாவில் தெருவடைச்சான் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை (மே 29) காலையில் அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடைபெற்றது. அப்போது பாடலீஸ்வரா், பெரியநாயகி அம்மன் கோபுரம் முன் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தொடா்ந்து அன்று இரவு தெருவடைச்சான் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து பாடலீஸ்வரா் தெருவடைச்சான் சப்பரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து தெருவடைச்சான் வீதி உலா நடைபெற்றது. தேரடி தெரு, சங்கரநாயுடு தெரு, வரதராஜப் பெருமாள் கோவில் தெரு, போடிச்செட்டி தெரு வழியாக தெருவடைச்சான் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை காலையில் யானை வாகனத்தில் நால்வா் புறப்பாடு, இரவில் வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன.

இன்று திருக்கல்யாணம்: விழாவில் புதன்கிழமை (மே 31) திருக்கல்யாணமும், ஜூன் 2-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் சந்திரன், செயல் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT