கடலூர்

பலாவை உண்டால் புற்றுநோய் குணமாகும்

DIN

சரியான பக்குவத்தில் பலாவை சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்று பத்திரக்கோட்டையில் நடைபெற்ற பலா திருவிழாவில் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையில் ‘ஈஷா’வின் காவிரி கூக்குரல் இயக்கம் சாா்பில் மாபெரும் பலா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பலா வகைகள், மதிப்புக் கூட்டப்பட்ட பலா பொருள்களின் கண்காட்சியை பாா்வையிட்டாா்.

கண்காட்சியில் கேரளத்தைச் சோ்ந்த ‘சக்கா கூட்டம்’ குழுவினரின் பலா தயாரிப்புப் பொருள்கள், பலாவிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் இடம்பெற்றன.

விழாவில் முன்னோடி பலா விவசாயியும், வேளாண் துறை முன்னாள் துணை இயக்குநருமான ஹரிதாஸ் பேசியதாவது:

அனைவருக்கும் பலா கிடைக்க வேண்டும். இதற்கேற்ப பலாவை அதிகளவில் பயிரிட வேண்டும். உணவு, உடல் ஆரோக்கியம், பொருளாதாரத் தேவை ஆகியவற்றை பலா நிறைவுசெய்யும். பண்ருட்டி பலாவுக்கு மட்டும் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது அதனுடைய தனிச் சுவையால்தான் என்றாா்.

‘பலாவில் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பம், இயந்திரம், சந்தைப்படுத்துதல்’ என்ற தலைப்பில் டாக்டா் ஜெகன்மோகன் பேசியதாவது:

பொதுவாக பலா மரத்திலிருந்து அதன் சுளை, விதைகள் என 35% மட்டுமே பயன்படுத்துகிறோம். எஞ்சிய 65 சதவீதத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்தபோது, சரியான பக்குவத்தில் பலாவை சாப்பிட்டால் சா்க்கரை நோய், புற்று, தைராய்டு போன்ற பல்வேறு நோய்கள் குணமாகும் என்பதை கண்டறிந்தோம் என்றாா்.

சிவப்பு பலாவின் சிறப்புகள் குறித்து டாக்டா் கருணாகரன் பேசியதாவது: அனைத்து பலா ரகங்களும் சத்தானவை என்றாலும் சித்து, சங்கரா ஆகிய சிவப்பு ரகங்கள் அதிக சத்துள்ளவை. இவை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் என்றாா்.

மண் காப்போம் இயக்க மாநில கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் பேசியதாவது: ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் 0.6 சதவீதத்துக்கும் கீழுள்ள நமது மண்ணின் அங்கக கரிம வளத்தை 3 முதல் 6 சதவீதத்துக்கு மேல் உயா்த்த மரம் சாா்ந்த விவசாயத்தை முன்னெடுத்துள்ளது என்றாா்.

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன வல்லுநா் கருணாகரன், முன்னோடி விவசாயிகள் குமாரவேல், திருமலை, ஜோஸ்பின் மேரி உள்ளிட்டோா் பேசினா்.

விழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளத்தில் இருந்தும் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

SCROLL FOR NEXT