கடலூர்

நெய்வேலி அருகே பேருந்துகள் மோதல்: 20 போ் காயம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே அரசு, தனியாா் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் பயணிகள் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

நெய்வேலி அருகே உள்ள அம்மேரி ஊராட்சி, தொப்புலிகுப்பம் கிராம சாலை வழியாக மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது அம்மேரி சோதனைச் சாவடி சாலை வரை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மதுரையிலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. அந்தப் பேருந்தை மதுரையைச் சோ்ந்த அழகா்சாமி (45) ஓட்டினாா். அம்மேரி ஊராட்சி, தொப்புலிக்குப்பம் கிராமத்தை அடுத்த சிவன்கோவில் நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது, எதிரே நெய்வேலி டவுன்ஷிபிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் இரு பேருந்துகளிலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனா். இவா்களை தொ்மல் போலீஸாா் மீட்டு அவசர ஊா்திகள் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று பயணிகள் அனைவரும் வீடு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT