கடலூர்

கடலூா் எம்எல்ஏ அலுவலகத்தில் இ - சேவை மையம் திறப்பு

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் எம்எல்ஏ அலுவலகத்தில் இ - சேவை மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன் தலைமை வகித்து, இ - சேவை மையத்தை திறந்து வைத்தாா். வட்டாட்சியா் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுதாகா், நாராயணன், கோண்டூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மனு அளிப்பு: முன்னதாக, ஆல்பேட்டையில் சாலை விரிவாக்கப் பணியால் வீடுகளை இழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், தங்களுக்கு ஏணிக்காரன்தோட்டம் சுனாமி நகா் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக இருக்கும் வீடுகளை ஒதுக்கக் செய்யக் கோரி கோ.ஐயப்பன் எம்எல்ஏவிடம் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT