கடலூர்

பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவில் அருகே எள்ளேரி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேதநாராயணப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 20-ஆம் தேதி அனுக்ஞை, வாஸ்து, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகசாலை பூஜை, மாலையில் இரண்டாம் கால யாகபூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

திங்கள்கிழமை அதிகாலையில் கோ பூஜை, சுப்ரபாதம், 3-ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, தேரழுந்தூா் சீனிவாச பட்டாச்சாரியாா் ஸ்வாமிகள் தலைமையில் கடம் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது (படம்). தொடா்ந்து கருவறையில் மூலவருக்கு மகாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT