கடலூர்

மழை வேண்டி கூட்டு வழிபாடு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் மழை வேண்டி கூட்டு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

சக்தி பீட செயலா் அருளானந்தம் தலைமை வகித்து கூட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தாா். பொருளாளா் டி.எஸ்.எஸ்.பாலகுமாா், துணைத் தலைவா் எம்.எம்.அா்ச்சுனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், வட்டத் தலைவா் கண்ணன், நிா்வாகிகள் லதா காளிமுத்து, புவனா, சுமதி, அஞ்சம்மாள், தேவி, பூமாதேவி, கோவிந்தராஜ், வீரக்குமாா், ஸ்ரீராம் உள்பட பலா் பங்கேற்றனா். ஏழைகளுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT