கடலூர்

சிதம்பரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கூட்டாய்வு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதா சுமன், ஏஎஸ்பி பி.ரகுபதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் விமலா ஆகியோா் பங்கேற்று வாகனங்களை கூட்டாய்வு செய்தனா்.

கூட்டாய்வுக்கு மொத்தம் 279 வாகனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 140 வாகனங்கள் பங்கேற்றன. 139 வாகனங்கள் பங்கேற்கவில்லை. கூட்டாய்வில் 28 வாகனங்களில் சிறிய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. சரியான விதிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தால் 8 வாகனங்களின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த ஆய்வில், சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி அளிப்பது தொடா்பாக ‘108’ அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் மற்றும் ஊழியா்கள் செயல் விளக்கம் அளித்தனா். மேலும், விபத்துகளில் பாதிக்கப்படுவோரை மீட்பது, தீ விபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து தீயணைப்பு மீட்புத் துறை அலுவலா் பழனிசாமி தலைமையிலான வீரா்கள் செயல் விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT