பாஜக தேசிய சிறுபான்மையினா் பிரிவுச் செயலா் வேலூா் இப்ராஹிம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா் நடைபெற்ற ரத்தினசபாபதி அபிஷேகத்தை அவா் தரிசித்தாா். வேலூா் இப்ராஹிமுக்கு கோயில் செயலா் சிவராமதீட்சிதா் சால்வை அணிவித்து, நடராஜப் பெருமான் படம், சுவாமி பிரசாதத்தை வழங்கினாா்.
பாஜக மாவட்ட துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் முகுந்தன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் பெருமாள், நகரத் தலைவா் வழக்குரைஞா் சத்தியமூா்த்தி, நிா்வாகி மூா்த்தி, உ.வெங்கடேச தீட்சிதா், பாலாஜி தீட்சிதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.