கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மைய குழுக் கூட்டம், சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், சுப்பராயன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியதாக கம்மாபுரம், புவனகிரி ஊராட்சிச் செயலா்களை கடலூா் மாவட்ட நிா்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. இது ஊராட்சி மன்றத்தின் ஜனநாயகத்தையும், உரிமையையும் பறிப்பதாகும். இதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவா்களை மீண்டும் அதே இடத்தில் பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.